அம்மா மட்டுமே ஆமாம்.

நான் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
என்னைச் சுற்றிலும் கும்மிருட்டு
சொன்னதையே திருப்பித் திருப்பி
யாரோ சொல்கிறார்கள்--ஏன்?
”நேரம் வந்து விட்டது”-எதற்கு?
கைகளை ஆட்டிப் பார்க்கிறேன்
கிடைத்த எதையோ பிடித்து
நான் எழ முயற்ச்சிக்க அய்யய்யோ
நான் தலை கீழாக விழுகிறேன்.


ஆயினும் எனக்கேதும் ஆகவில்லை
காயங்கள் ஏதும் எனக்கு இல்லை
”அம்மா அம்மா” என அலறல் சத்தம்
”சும்மா கத்தாதே”--அதட்டல் ஒலி
என் தோள்களைப் பிடித்து எவரோ
முன்னே இழுத்து விட்டார்கள-அய்யய்யோ
கண்கள் கூசுகிறதே,இது என்ன?
எனக்கு கண்கள் தெரியாதா?

ழ்ழழாழா” என நான் இப்போது அழ
ஏன் என் குரலில் அம்மா வரவில்லை.
நான் தமிழன் “ழ”கரத்தோடு பிறந்தேன்.
என் அம்மா அடங்கி விட்டாள்.
வாழையடி வாழையாக இப்படித்தான்
“அம்மா அம்மா” என எதிரொலிக்கும்
அம்மாவுக்கு இணையாய் இங்கு
அம்மா மட்டுமே ஆமாம்.!

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (4-Dec-12, 4:04 pm)
பார்வை : 144

மேலே