பூக்களின் தேவதை...

நீ
பூக்கள் பறிக்க
ஆசைப்படுகிறாய்....
உன் விரல் திண்ட
ஆசைப்படுகின்றன பூக்கள்....
**************************************
நீ
பூப்பறிக்கும் பொழுது
உதிர்ந்த பூக்கள் புலம்பின....
உன் கூந்தல் சேரமுடியாமல்
வாடித் தவித்தன......!
**************************************
நீ
தினமும் மறக்காமல்
பூக்களை பறித்துவிடு ....!
நீ
பூப்பறிக்க மறந்த
நாட்களில்
தானாகவே உதிர்ந்து
தற்கொலை செய்துகொள்கின்றன
பூக்கள்......!
**************************************
நீ
பூக்களைச் சூடி
தெருவில் வராதே....!
பூக்கள் கூட உன்மேல்
பொறாமைப் பட்டு விடும்....!
தேனெடுக்க வண்டுகள்
உன்னையே வட்டமிடுவதால்.....
**************************************
பூக்களின் தேவதையே
என்னில்
ஏக்கங்களின் விதையை
ஏன் தூவிச்சென்றாய்....?
உன்னால் அது இன்று
என் உள்ளத்தில்
வேர்விட்டு மரமாய்
வளர்ந்து நிற்கிறது......
அதன் கிளைகள் கூட
கையேந்தி கேட்கிறது
உன்னிடம்
காதல் வரத்தை மட்டும்.....தருவாயா...?
எந்தன் உயிர்க்கிளைகள்
வாடாமல் இருக்க
சற்று தளிர்க்க
வருவாயா.....?
எந்தன்
வேர்களுக்கு உரமாக.....
உயிரோடு உயிராக......
******************************

எழுதியவர் : அருண்குமார்.அ (6-Dec-12, 1:53 pm)
Tanglish : pookalin thevathai
பார்வை : 2610

மேலே