தமிழ் கல்வி வேண்டும் தமிழா !!

கல்வி வேண்டும் தமிழா !! தமிழ்
கல்வி வேண்டும் தமிழா !!

பெற்ற அன்னையை மறந்ததும் உண்டோ !!
கற்ற கல்வியை மறப்பதும் உண்டோ !!
மற்ற மொழியினை சிறப்பதுன் பண்பா !!
உற்ற தமிழினை வெறுப்பதேன் நண்பா!!

கல்வி வேண்டும் தமிழா !! தமிழ்
கல்வி வேண்டும் தமிழா !!

நாடு கடந்த தமிழ் கோடி வாழவே !
வீடு முழுதும் தமிழ் பாடி மகிழவே !
சீறு குலைந்த தமிழ் மொழியினை காத்திடு !
வீறு கொண்டெழு தமிழ் கல்வியை போற்றிடு !!

கல்வி வேண்டும் தமிழா !! தமிழ்
கல்வி வேண்டும் தமிழா !!

எழுதியவர் : ஜெயராஜ் (8-Dec-12, 11:28 am)
பார்வை : 182

மேலே