கையேந்தும் நெஞ்சங்கள்
பிறந்தவர் வாழ்ந்தாக வேண்டும்
வாழ்ந்திட வசதிகள் வேண்டும்
வசதிபெற செல்வம் வேண்டும்
செல்வம்பெற உழைக்க வேண்டும்
உழைக்காமல் பிழைக்க வேண்டும்
பிழைத்திட கையேந்த வேண்டும்
கையேந்த மனதிடம் வேண்டும்
மனதிடம்பெற இதயம் வேண்டும்
இதயமுடன் இல்லாமை வேண்டும்
இல்லாமை இல்லாநிலை வேண்டும்
மாற்றிட மனங்கள்மாற வேண்டும்
ஈகைகுணம் வளர்ந்திட வேண்டும்
கையேந்தும் நிலைஒழிந்திட வேண்டும்
உழைக்காதவரும் உழைத்திட வேண்டும்
உலகில் இந்நிலை நிலைத்திட வேண்டும் !
பிழைத்திட வழியும் வகுத்திட வேண்டும்
பிறந்தவர் எல்லாம் வாழ்ந்திடவேண்டும் !
மாற்று வழியும் கண்டிட வேண்டும்
எல்லோரும் எல்லாம் பெற்றிட வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் மறைந்திட வேண்டும் !