குரல் கேட்டதா....!
நீ பிறக்கும் போது இன்பமாய் கருதினேன்
என் பிரசவ வலியை......
அன்று உன் சிரிப்பு எனக்கு மருந்தாய் இருந்தது ....
நீ வளரும் போது என் மார்பில் எட்டி
உதைக்கும் போது என் கதறல்
கேட்டு நீ சிரித்த சிரிப்பு
சுகமாய் இருந்தது எனக்கு .....
இன்றோ நீ உன் காதலனுடன்
திருமணம் முடித்து சந்தோசமாக
சிரித்து வாழ்கிறாய்
ஒரு வேளை
என் அழு குரல் கேட்டுவிட்டதோ........!