நம்மை நான் வாழ்த்துகிறேன்.
என்றாவது இரண்டு ஒன்றாகும்
என்றால் அது நாம் தான்.
என்றாவதோர் ஆணை
மனைவி நேசித்தாள்
என்றாள் அது நீ தான்.
என்றாவது ஒரு மனைவி
கணவனில் மகிழ்கிறாள்
என்றால் பெண்களே
முடியுமானால் என்னுடன்
உங்களை ஒப்பிடுங்கள்
அந்த ஒருத்தி நான்தான்.
ஏனெனில் உன் காதலை
பூமியில் உள்ள அத்தனை
தங்கச் சுரங்கங்கள்,
வைரக் குவியல்கள்
கிழக்குத் திக்கின்
விலை மதிக்க இயலா
புதையல்களை விட
விலை மதி்ப்புள்ளதாய்
நான் மதிக்கிறேன்.
நீ உன் காதலி என் மீது
கொண்டுள்ள காதல்
தாகத்தை இவ்வுலகின்
எந்த ஆறும் தணித்திட
இயலாது என்பதால்
இதற்கு ஈடு இணை இல்லை.
“பர மண்டலம் உனக்கு
பன் மடங்கு வழங்கட்டும்”
என்றே நான் செபிக்கிறேன்.
நாம் வாழும் போது உள்ள
இந்த உயிர்க் காதல்
மரித்தும் வாழ்ந்திடும்
என்றென்றும் என்பதால்
நம்மை நான் வாழ்த்துகிறேன்.
.