வாழ்க்கை பூங்கா
உலகின் கண் வாழ்க்கையில்
அன்பும்,அருளும் வழிந்தோடும்
இன்ப விதைகளாக !
வாழ்க்கையில்
சிக்கல்களையும்
சங்கடங்களையும்
கரையும் பனிக்கட்டி போல
தாயிடம் சொல்லி
மனம் கரைய வேண்டுமே !
ஏற்றுக் கொள்ள வேண்டும்
மலர்முகத்துடன்
சோதனைகளை
அன்பின்வழியே !
நினைவுகள்
மோனதிரையில்
சித்திரம் வரையாத போது
வசந்தம் வரும் கானகங்களில்
காற்றிலேறி பவனி வரும்
எண்ணங்களெல்லாம் ..!
லட்சியங்கள் எனும்
களத்த்திலேறி
தூய்மையாக்கப் போராடவேண்டும்
முன்னேற்றத்துடன் ..!
அழகிய பூங்காவாகும்
அன்றிலிருந்து
கருகிப் போன
வாழ்க்கையெல்லாம்...
வானத்தில் பறக்கும் பறவைகள் போல
விடுதலை விதைகளாக
அழகாகிடுமே !!