முதல் முதலாய் நடனம் ஆடினேன்.

தோழி ஒருத்தி கூப்பிட்டாள் என
தோரணமா கட்டிக் கொள்வார்கள்
தோண்டித் தோண்டி கேட்காதீர் கேட்கத்
தோதான கதை அல்ல இது.

”பிறந்த நாள் எனக்கு கொண்டாடிட
சிறந்த உடையை உடுத்தி வந்திடு-சிவந்த
நிறமுள்ள பையன்கள் பலர் சிட்டுபோல்
பறந்தே வருவார் “பைக்”கில் ”காரில்”

அவள் சொன்ன சொல் கேட்ட என் மனம்
அலைமோதி ஆட்டம் போடுவதென்ன
இருக்கும் இடம் தெரியாமல் கால்கள்
இடமாய் வலமாய் ஓடுவதென்ன!

எப்படித்தான் ஆடுவேன் ஆண் கைப் பிடித்து
குப்புற விழு்ந்தால் குவியுமே வெட்கம்
அப்படி நிகழாமல் அனைத்தையும் தடுத்திட
அப்பியாசம் செய்திட்டேன் ஆசையில்.

கண்ணாடி முன் நின்று கைகளை ஆட்டினேன்
பின்னலை இழுத்துப் பின்னழகு பார்த்தேன்
புருவத்தை உயர்த்தித் தாழ்த்தி வைத்து
உருவமலா சிரிப்புப் பல சிரித்தேன்.

அந்த நாளும் வந்து விடாதோ என
அறிவை மூட்டை கட்டி விட்டு எனது
சொந்த வீட்டில் சொல்லிக் கொள்ளாமல்
பந்தம் தேடிப் பழகிடப் போனேன்.

நாட்டியம் நடந்தது அங்கே நண்பர்
பாட்டிலை உடைத்துத் திறந்து குடித்து
ஊட்டிய இனிப்பையும் விழுங்கி அவர்க்கு
வாட்டமாய் ஆட்டம் போட்டேன்.

தொட்டுத் தொட்டு ஆடிய ஆண்கள்
பட்டுப் பட்டுப் பெண்களை அணைத்துக்
கொட்டிச் செல்லமாய் கொஞ்சி அவர்களை
எட்டிடும் வரையில் ஏய்த்து விட்டனர்.

கட்டமும் நட்டமும் எனக்கு மட்டுமே
காதலன் காதலி நிலைமை மாறி
காமுகன் காமுகி ஆகிய இக்கதையை
காதோடு உங்கட்கு மட்டும் சொல்கிறேன்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (11-Dec-12, 3:16 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 121

மேலே