என் மரணம்

காலத்தின் காலடியில் சிக்கிக்கொண்டு
கடலில் கலக்கத்தோடு கரைதேடியலைந்து
பயணிக்கின்ற தருவாயில்
கலங்கரைவிளக்கத்தின் ஒளிக்கீற்றை
என்விழிகள்துலாவிக்கொண்டிருக்கின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்
பாய்மர படகின் துவாரம்வழி
ஓரவஞ்சனையில் ஒய்யாரமாய் சிரிக்கிறது
நிர்ணயிக்கப்பட்ட என் மரணம்...!

எழுதியவர் : ச.இமலாதித்தன் (27-Oct-10, 10:59 am)
சேர்த்தது : emalathithan
பார்வை : 451

மேலே