தனிமை

கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள் யாதுமற்ற
வெறுமைகளால் மட்டுமே நிரம்பி
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
நடு வரப்போர ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும் நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின் தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின் தனிமையில் நான்...!

எழுதியவர் : ச.இமலாதித்தன் (27-Oct-10, 11:03 am)
சேர்த்தது : emalathithan
பார்வை : 450

மேலே