கற்பு
நகரத்துக் காட்டானின்
காமக் காட்டாற்று
வெறியாட்டத்தில்
பறிபோனது
தெருவோரம்
குப்பை பொறுக்கும்
சிறுமியின் கற்பு...!
சூழ்ச்சி செய்யும்
சூட்சமக்காரர்களால்
சூழப்பட்டுள்ள இந்த
சமுதாயத்தில்
இவன்போன்ற
சந்தர்ப்பவாதிகளின்
அற்ப சந்தோசங்களுக்காக
இங்கே சந்திசிரிக்கிறது கற்பு...!
இதுபோல்
சமுதாயத்தின் மீதுள்ள
நம்பிக்கைகளும்
பலநேரங்களில்
சூறையாடப்படுவதால்
சூழ்நிலைக் கைதியாய்
கற்பிழந்து நிற்கின்றது
மானுடம்...!
பல்லிழித்து
பகல்வேசம் போடுகின்ற
பணத்திற்காக
பள்ளிப்பருவத்திலேயே
வீதிக்கு வரவழைத்த
வறுமைபோன்ற
சமுதாயப் பிழைகளை
இல்லாதழிக்க
ஒருமித்த குரலாய்
ஒன்றிணைவோம்
மானிடனாய்...!