காதல் கண்ணீரானது ...!
எதற்கும் கலங்கிடாத என் கண்கள்
உன் பிரிவில் கலங்கியது ...
நீ தந்த பிரிவால்
என் கண்களில் ஈரம் இல்லாத
நாட்களே இல்லாமல் போகிறது...
உன் பிரிவை நினைத்து நினைத்து
வரும் என் கண்ணீருக்கு எதைச்சொல்லி
நிறுத்துவது என்று புரியாமல் தவிக்கிறேன்...
என் துயரம் நீ அறிய
என் உயிர் பிரியவேண்டுமோ ...?