முத்தமிட்டுக் கொண்டாடுங்கள் வாழ்வை... (பாகம் 2)

உதடு ரேகைகளின்
எண்ணிக்கையில் இருக்கிறது
முத்த யோகம்...

****************

சிந்தாமல் சிதறாமல்
முத்தமிடு
சிந்திய முத்தம்
காடாகும்
சிதறிய முத்தம்
வனமாகும்.......
***************

இரு கைவிரல்களுக்குள்
அவள் முடி கோர்த்து
கொஞ்சம் தலை சாய்த்து
முத்தமிடு அல்லது
முத்தமிட்டுக் கொண்டே இரு....

********************************


முத்தத்தின் நிறம்
இளஞ் சிவப்பு
முத்தத்தின் நேரம்
இளம் மாலை
முத்தத்தின் காலம்
இளஞ்சாரல்
முத்தத்தின் தேவை
முழுமனது

******************************

உதடுகள் எழுத எழுத
முத்தத்தின்
பக்கங்களும் தீரவில்லை
உதடுகளின் ஈரமும் காயவில்லை...

எழுதியவர் : ஆண்டன் பெனி (16-Dec-12, 11:42 am)
பார்வை : 159

மேலே