உருவாகும் புது உலகம் !!

உரிமைகளுக்காக போராடும் மனிதா!
உலதகதின் உர்யிரினங்களுக்காக கொஞ்சம் போராட தொடங்கு !

உணவுக்காக உழைக்கும் மனிதா !
உயிர்வாழ வெயக்கும் உயர் தானியங்களை
காக்க புது முறைகளை கண்டெடுக்க
விழித்தெழு !

மேன்மையை மென்மேலும் பெருக அழகு சாதனங்கள்
படைக்கும் மனிதா !
பூமியே அழுக்காய் போய் கொண்டிருக்கிறது அதை
அழகாக்க கொஞ்சம் சாதனங்கள் படைப்பாயா ?

நதிகளில் பாவங்களை நிவர்த்தி செய்கிறாய் மனிதா !
அந்த நதிகள் பராமரிக்காமல் இருப்பதை கொஞ்சம் நிவர்த்தி செய்வாயா?

பேருந்தில் பயணம் செய்யும் மனிதா !
அந்த பயணங்கள் உனக்கு நோய்மை உண்டாக்காமல் இருக்க சுற்றுப்புற தூய்மையை
கொஞ்சம் கவனிப்பாயா ?

கனவுகள் பல சூடிய மனிதா !
கண்கள் நம்ப முடியாத புதுமைகளை படைத்தது
இந்த உலகத்தை காக்க வருவாயா !

எழுதியவர் : (16-Dec-12, 10:07 pm)
சேர்த்தது : K LAKSHMINARAYANAN
பார்வை : 111

மேலே