கட்டில் சமத்துவம்……..

ஆதியில்
விலா எலும்பு முறிக்கப்பட்டதன்
அடங்காத கோபம்,
அய்ந்து பதிகளின்
பத்தினியென்றும்
அய்ரோப்பிய புனித நூலில்
ஆணுக்கு பெண் அடிமையென்றும்
இருண்ட ஆடைகளின்
மூச்சுவிடும் வலை வழியே
பெரு மூச்சுவிட்டதினால்
முத்தலாக்கென்றும்
வகை வகையாய்
போகம் செய்த நாளனைத்தும்
அம்மாவே தெய்வம் என்பர்…

அவர்களின் உடல்சுகத்திற்கு
வேறோர் உபாயமற்றுப் போனதினால்
கட்டில் மெத்தையில்
இணையாய் கிடக்கிறாள்
ஆணுக்கு பெண் சமமென்றே….

எழுதியவர் : ஆண்டன் பெனி (17-Dec-12, 1:05 pm)
பார்வை : 116

மேலே