வாழ்க்கையும் காதலும் தோல்வியும்

பிறக்கின்ற எல்லா குழந்தைகள் போல்
அழுது கொண்டே பிறந்த
எனக்கு மட்டும் அழுகை நிற்க
பல வருடங்கள் ஆனது....

என் நிலை அறிந்த
மழலை பருவம் அன்பிற்கு
ஏங்கி ஏங்கி தவித்து...
குடும்பத்தின் பல இழ(ற)ப்புகளை சந்தித்து
இறப்பிற்கும் இழப்பிற்கும்
மதிப்பில்லாமல் போனது....

என் பால்ய பருவத்தில்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
என்று கூறிவிட்டு அவர்களுக்குள்
கூறிக்கொண்ட பொய்களால் ...
பொய் சொல்லி சொல்லி தப்பிக்கலாம் என்று
மாட்டிக்கொண்டே ஒவ்வொருமுறையும்
அனுபவித்தேன் ...
நானும் பொய்யை விட வில்லை
அவர்களும் பொய்யை விடவில்லை....

நண்பர்கள் என்று வட்டம் வந்த பிறகே
வாழ்வின் இன்பங்களின் அர்த்தம் புரிந்தது
நண்பனை பற்றி சொல்
உன்னை பற்றி சொல்லுகிறேன்
என்ற பழமொழி ...
உண்மையாகவே எனக்கு பொருந்தும் ....

என் உறவுகள் என்னை பற்றி அறிந்ததை விட
என் நண்பர்கள் என்னை
பற்றி நன்கு அறிந்து இருப்பார்கள்...
இருந்தாலும் ...?

ஏதோ ஒரு உண்மையான அன்பிற்கு
அலைந்து கொண்டே இருந்தேன் ...!
பெண்களை ஏனோ தெரியவில்லை
பிடிக்காமலே கடந்து வந்தேன் ....

ஆனால் அவளை கண்ட நொடி ....!

என் பிறப்பிற்க்கே
அர்த்தமாய் உணர்ந்தேன்
எங்கும் கிடைத்திடாத அன்பை
அவளிடம் பெற்று விடலாம்
என்று துடித்தேன்….

அழகை ரசிக்க ஆரம்பித்தால்
கவிதை திருட தோன்றும்
கவிதை திருட தோன்றினால்
அவளை ஒப்பிட தோன்றும்
அவளை ஒப்பிட்டு பார்த்தல்
கவிதையை திருத்த தோன்றும்
கவிதையை திருத்தி பார்த்தல்
உன்னால் ஒரு கவிதை தோன்றும் ... என்று
அவளால் நானும் எழுதினேன்

எத்தனை எத்தனை கற்பனையாலும்
அவளின் அழகிற்கு ஈடு கொடுக்க
முடியவில்லை ...
நானும் எழுதுவதை
நிறுத்தவில்லை ....

பரவசத்தின் உச்சம்
காதலின் தொடக்கம் என்று
என் வாழ்க்கை சொல்லியது
அனுபவித்தேன் இன்பத்தை
ஒரு தலையாக...

என் வாழ்வின்
மொத்த இன்பமும்
அந்த காதலே என்று சுவாசித்தேன் ....

இரவில் அவளை காண்பேன்
என்று நிலவையே கண்டேன் ...
தேவதை தேவதை என்று
அவளையே நினைத்தேன்...

செடியில் மட்டும்
பூக்கின்ற பூக்களை
அவளின் சிரிப்பில் கண்டேன்...

எத்தனை எத்தனை
பெண்களை கண்டாலும்
அவளின் முகத்தை
மட்டுமே பார்த்தேன் ...
ஆனால் பெண்மையை
ரசிக்க தொடங்கினேன்...

காதலை அவளும் உணர்ந்தால்
என் உயிர் என்று நினைத்தாள் ....

அன்பை நேசித்தேன்...
சுவாசித்தேன்...
உணர்ந்தேன் ...
அனுபவித்தேன்...

நொடி பொழுது பல மணி பொழுதானது
அவள் இல்லாதபோது ....
பல மணி பொழுது நொடி பொழுதானது
அவளுடன் இருக்கும் பொழுது...

என் கவிதைகளை அவள் ரசிக்க
அவளை மிக மிக ரசித்தது என் கவிதைகள் ...
எப்படி எல்லாம் வாழவேண்டும்
என்று கனவு கண்டு வந்த
எனக்கு இடியாய் தந்தாள்......?

திருமண அழைப்பிதழ் ....

கண்கள் கலங்க …
வார்த்தைகள் வர மறுக்க …
நடுக்கம் தொற்றிக்கொள்ள …
மயங்கி தான் விழுந்தேன்
வாழ்கையில் ….!

அவளை பார்த்தேன் என்று
நான் மறந்த நண்பர்கள் தான்
தாங்கி பிடிக்கிறார்கள் இப்பொழுதும் ....!

இப்பவும் அவளை காண்பேன்
என்று நிலவையே காண்கிறேன்
தேவதை தேவதை என்றே நினைக்கிறேன்….

மீண்டும் முற்பகுதிக்கே
என் வாழ்க்கை சென்றது
அழுகைக்கும் கண்ணீருக்கும்
அர்த்தம் இல்லாமல் போகிறது ....

நினைவலைகள் மட்டும்
சுற்றி சுற்றி வருகிறது
பெண்களை மட்டும் மீண்டும்
ஏனோ பிடிக்காமலே போகிறது...?

எத்தனை எத்தனை காலம் சென்றாலும்
நான் தேடும் அன்பு மட்டும்
கிடைக்காது என்று தெரிந்தும் ...
அவளின் அன்பை மட்டும்
ஏனோ மறக்க மறுக்கிறது மனம் ....!

காதல் தோல்வி இன்னும்
எழுத துண்டுகிறது...
காதலை தோல் உரிக்க
சொல்கிறது....?

உணர்வு இல்லாத காதலும்
கடவுள் போல் சிலை தான் ....!

எழுதியவர் : கருணாநிதி .கா (17-Dec-12, 4:17 pm)
பார்வை : 399

மேலே