அப்படி அப்படியேதான் வாழ்கிறோம்...!
![](https://eluthu.com/images/loading.gif)
சில
நொடிகளில்..,
கண்களை மூடியபடி
கருத்தொன்றி சிந்தித்தேன்..!
அவசரமாய்
ஏதாவது செய்தபின்..,
அவலட்சணமாய் மாறிட
அப்படியே பழியேற்கிறது விதி...!
ஆக்கம்
பலவடிவங்களில்
பரந்துகிடக்க அறியாது...,
அழிவையே தேடும் ஆர்வம்...!
நாட்கள்
நகர்ந்து கொண்டே..,
நகைப்புடன் பயணிக்க
நடப்புகள் யாவுமே துன்புறும்...!
அர்த்தம்
தெரிந்தும் மறைத்து..,
தெம்பாய் பொய் பிழைக்க
தெளிவென நினைக்கும் மனம்..!
மாற்றம்
மரணமாகிய பின்...,
மறுஜென்மம் எடுத்தாலும்
மடமை மகிழ்வோடே இருக்கும்...!
எல்லாமும்
புரிந்தபின் அச்சம்...,
புகலிடம் ஏற்றபடியே
புலம்பல்கள் , இதுவே மிச்சம்....!
ஆனாலும்
அவசர உலகின் நியதியை..,
அசைபோட்டபடியே தினமும்
அலுக்காமல் அப்படியே வாழ்கிறோம்....!