பட்டாம் பூச்சியின் நேசம்
அழகானது
பட்டாம் பூச்சி
வயோதிகம் அது
வாலிபத்தைக் காட்டிலும்..!
பூரணமானது
அதன் அற்புதம்
முதிர்ச்சியே ..!
பரிணாம வளர்ச்சி
புழுவாக இருந்து
கூட்டுப் புழுவாக மாறி
இரண்டு கட்டங்களையும் தாண்டி
மத பேதமின்றி
பட்டாம் பூச்சியாய்...!
குஞ்சுகளைத் தருகிறது
பறவைகள்
புழுக்களை தருகிறது
பட்டாம் பூச்சிகள்..!
மவுன தவம்
கூட்டுப் புழுக்களாக
ஆனந்தத்தில்
சிறகடித்தலே..!
இலைகளை தின்று
ஆதவன் அடித்ததில்
மினு மினுப்பாய்
புழுவாக மாறி
பட்டாம் பூச்சிகளாய்..!
பூக்களின்
மகரந்தத்தை
ஆராய்ந்து
புலன் விசாரணை ...!
பூக்களில் அமர்கின்ற
பட்டுப் பூச்சியும் ஒரு பூ ..!
சாதிகளை ஆராய்ந்து
மூழ்குபவர்கள்
புழுக்களைப் போல்
நெளிந்து கொண்டிருப்பர்...!
அதனைத்
தாண்டியவர்கள்
சிறகடிப்பார்கள்
பட்டாம்பூச்சிகளாய்...!