வீசிடும் புன்னகை
மலரும் மலர்கள்
தன் தலைவனை கண்டு
வீசிடும் புன்னகை
தன் இதழ்களாலே ..!
குயிலின் கீதம்
வீசிடும் புன்னகை
தன் இனத்தோடு மகிழ்ந்து
கூவுதளாலே..!
கடல் காற்றோடு
புன்னகை வீசிடும்
பால் போல் பொங்கும்
தன் அலைகளாலே ..!
காற்றின் மொழியை
வீசிடும் புன்னகை
இனிய தென்றலாலே ..!
பச்சை தாவணிகள் (மரங்கள்,செடிகள்)
வீசிடும் புன்னகை
தன் கைகளை விரித்து
அழைக்கும்
நிழலினாலே ..!
மயிலின் அழகு
வீசிடும் புன்னகை
தன் வண்ணத் தோகை விரித்து
அகவுவதாலே ...!
மனிதன் மட்டும்
வீசிடும் புன்னகை
தன் செவ்விதழ் அசைத்து
சிரிப்பதினாலே ...!