நெஞ்சமொரு முறை நீ என்றது,,,

நெஞ்சமொரு முறை நீ என்றது,,,

உன் நெற்றி சுருக்கத்தில்
என் நெஞ்சு சுருங்கி போகிறது
ஒன்றுமே தெரியாதவளாய்
பார்வை பொறி வைத்துவிட்டாய்

உன் பிடிக்காத வார்த்தைகளில்
பிடிமானம் கொண்டுவிட்டேன்,,,

என்றும் என்னிடமே உதிர்த்துவிட்ட
புன்னகையை ஏன் எல்லாரிடத்திலும்
உதிர்க்க தவறிவிட்டாய்,,, இன்று
தவறாக அல்லவா புரிந்து கொண்டேன்

மூன்றெழுத்து மூச்சி சூட்டினை
உன் முகத்தோடு ஊதிவிட லட்சம்
பட்டாம்பூசிகள் படபடக்கிறது
என் இதய துடிப்புகளாய்,,,,

மேலாய் நெருடிய என் வாசம்
புரியாமல் வாசல் நோக்குகிறாய்
வருவது யாரோ என்று ,,,

ஒன்றுமே வேண்டாம்,,உன்னில்
புலப்படாமல் புறப்பட்டு விடுகிறேன்,,,
என்று விடுகையில் விடாமல்
பின்னே வந்து நிற்கிறாய்,,,

இரயில் நிலைய நாற்காலியும்
என்னை பாரமாக நினைப்பதாய்
உணர்கிறேன் உன் குசுருதிகளை
புரியாதவனாய்,,,

என்றோ ஒருநாள் நெருங்கி வந்து
நானிருக்கிறேன் என்பதை போல்
குரும்புப்பார்வையை கண்ணீராய்
தெளித்து விட்டு ஓடுகிறாய்,,,

நானோ ஒதுக்கிவைத்த வார்த்தை
வலிகளை ஓசையோடு உடைத்தெறிய
தனிமை வேண்டி தேடுகிறேன்,,

கிடைத்து விட்ட நேரமெல்லாம்
தவித்து விட நினைத்த கணம்
தண்ணீராய் நீ வந்து தாகம் தீர்க்கிறாய்

என்னிடமே பல முறை கேட்டிருக்கிறாய்
என்னை ஏன் உனக்கு இத்தனை பிடித்திருக்கிறது
என்று,,விளக்கம் புரியாமலா வினவினாய்,,

உனக்கு பிடித்த ஆடைகளை எனக்கு
பிடித்தால் மட்டுமே அணிந்துக் கொள்கிறேன்
என்றுரைத்தாய்,, ஆணித்தனமாய் அன்று

புரிந்திருக்கவில்லை நான்,,,உன் கல்யாண
ஆடைகளையும் கடைத்தெருவில் தேடி எடுக்கும்
விதி நாள் என்னில் வருமென்று,,,

இன்றுன் உரைகளை முடித்துவிட்டாய்
இவன்தான் உன் வருங்கால கணவன் என்று
முடக்கிவிட்ட என் மௌனங்களுக்குள்
ஆயிரமாயிரம் கேள்விக்கணைகள் சுட்டெரிக்கிறது

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (19-Dec-12, 12:48 pm)
பார்வை : 357

மேலே