அம்மா என்ற சொல்லைவிட....
எழுத்தறித்தவன்
இறைவன் என்றால்,
எழுத்தறிவதற்கு முன்பு
பேசிய அம்மா என்ற சொல்லை
சொல்வதற்கு முன்பே
கருவறையில் சுமந்த
அன்னையை என்னவென்று சொல்வது....
அம்மா என்ற சொல்லைவிட
தமிழில் சிறந்த சொல்லுண்டோ?
இதனை மறுக்க
இவ்வுலகில் ஆளுண்டோ?