நட்பின் நந்தவனம்
கூடுவாரு கூடாதேன்னு கூப்பாடு போட்டாலும்
குட்டிச்சுவறு ஆகிடுவன்னு கட்டாய படுத்தினாலும்
சேத்தாளி வேண்டாமுன்னு சேதியா சொன்னாலும்
வாயிக்கும் காதலியை விட இனிமை இந்த நட்பு
என் அகத்தோடு புறம் அறிந்த - அன்பு நட்பு
உருவம் பெரிதல்ல என உணர்த்திய - உயிர் நட்பு
கடந்து போன கனவை கூட கடன் வாங்கி தரும் - காதல் நட்பு
உன் உயிர் போனாலும் ஒரு துளி கண்னீர் வ்ராதெனக்கு
கண்னீர் வரும் வழியை நட்பே நீ காட்டியதில்லை எனக்கு
உலகை முற்றுபுள்ளியாக்கி உன்னத நட்பால் உயர்ந்து நிற்ப்போம்
அன்பில் ஆழியாவோம் பண்பில் பகலாவோம்
கோபத்தை குறைத்து சிகரங்களின் உச்சியடைவோம்
துரோகத்தை தூய்மையாக்கி தோற்றாலும் வென்றிடுவோம்
முதல் மனிதன் தொடங்கி முகபுத்தகம் வரை இவ்வுலகே எங்கள் நட்பின் நந்தவனம்
உயிர்கள் உள்ளவரை இந்த நட்பிருக்கும்
மாண்புமிகு நட்பிருக்கும்.