சாதிவெறி ஒ(அ)ழிப்போம்-கே.எஸ்.கலை

வெறும் கல்லாய் இருந்த வாழ்கையை
சிற்பமாய் செதுக்கியது காதல்...
அதனை கல்லறையாய் காணத்
துடிக்கின்றது சொந்தங்கள்…!

என் வானில் சுற்றி வரும்
சூரியனைத் துரத்துகிறார்கள்....
அவர்களுக்கு நிலவின்
குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக...!

அவர்களின் உணர்ச்சியால் பிறந்து
உழைப்பால் வளர்ந்ததற்காக...
என் உணர்வுகளைக்
கூலியாய் கேட்கிறார்கள்...!

பாதி உயிர் தந்து வாழும் என்னவனை
சாதி உணர்வோடு பிரித்துவிட்டுப்
பகுத்தறியும் பலத்தைப்
பாசம் எனச் சொல்கிறார்கள்...!

உலகம் உருமாறி போனாலும்
சில உறவுகளின்
உள்ளங்கள் - இன்னும்
உணர்வின்றியே இருக்கின்றது...

உயிர் போகும் நிலையில் கூட
சாதி வெறி போகவில்லை - இந்த
சாக்கடைப் பூச்சிகளுக்கு...!!!

எழுதியவர் : கே.எஸ்.கலை (21-Dec-12, 6:54 pm)
பார்வை : 482

மேலே