அண்ணன் ஜெ...வின் நினைவுக் கவிதைகள் சமர்ப்பணம் 1.
தேசச் சாலை
தேசச் சாலையெங்கும்
வர்க்கபேதக் குண்டுகுழிகள்
அநீதி முட்கள்
ஒழுங்கீனப் புழுதி
நனவுப் பாதையில் நடக்க முடியாமல்
கனவு வீதிகளில் வளம் வரும்
மக்களின் மனக் குதிரைகளை
நமது மேடைத் தலைவர்கள்
ஜம்பச் சவுக்கால்
அடித்து விரட்டுவதால்
கண்மூடித்தனமான பாய்ச்சலில்
அவை திசை தப்பி ஓடுகின்றன .!
வாய்மைப் பிரதேசத்துக்கு
மீண்டும் அவை வருவதற்குள்
காலொடிந்து போய்விடக் கூடாது
என்ற கவலை ஒரு பக்கம்
சாலை சரியாக வேண்டுமே
என்ற கவலை மறு பக்கம் !
---அன்பளிப்பு ---
அண்ணன் ஜெகன்