என் செய்வேன்
என் செய்வேன்
அண்ணா
நான் செய்த பாவம் என்ன..?
தொலைந்திட்ட என் வாழ்கையை
மீட்க யார் வருவார் ? அண்ணா .!
என் இறப்பிற்கு முன்னாள்
புது பிறப்பொன்று உண்டென்றால்
என் சிகிச்சைக்கு உதவிட்ட
என் உடன் பிறவா அண்ணன்களை
அன்பு உள்ளங்களை
நேரில் பார்த்து
நன்றி கூறிட
எனக்கு கண் வேண்டும் அண்ணா !
உங்கள் சங்கு குரலில் உரைத்திடுங்கள்
இவ்வுலகிற்கு !
அன்புடன்
உங்கள் தங்கை
வினோதினி