யோ(நே)சித்து பழகிடு....

சந்தர்ப்பம் என்னைக் கவியனாக்குது
காதல் என்னை தேடிவருகுது
குடும்பம் என்னை ஒதிக்கிவைக்குது - சில
நட்பும் என்னை கேலிசெய்யுது

இத்தனைக்கும் மத்தியிலே
என்னை எனக்கே பிடிக்குது - ஆனால்
பிடித்த பலருக்கு வெறுக்குது
நடித்த சிலருக்கு புரியுமிது

"அன்புடைமை ஆன்றகுடிப்பிறத்தல் இவை இரண்டும்
பண்புடைமை எனும் வழக்கு"
இது திருக்குறள்
"அன்புக்கு உன்னிடம் இருக்குமாயின் பஞ்சம்
தோலால் நீபோர்த்திய என்புதன் மிஞ்சும்"
இது எனதுகுரல்

முகத்தால் காட்டுவது நட்பல்ல நண்பா!
உள்ளத்தால் காட்டுவதே நட்பு
உள்ளத்தால் காட்டியும் புரியாத சிலருக்கு
உதட்டால் காட்டியும் சரியலையே அவர்மனசு

வாசித்து பார்த்திடு நீ என்கவியை
யோசித்து பழகிடு இனியுன் வாழ்வில்
நேசித்து பட்டிட்ட துயரத்தை - நீயும்
வாசித்து பார்க்கவைத்த தமிழுக்கு
"நன்றி"
உமக்கும்.

எழுதியவர் : மன்னார் சிறி. (23-Dec-12, 5:11 am)
சேர்த்தது : srith2020
பார்வை : 325

மேலே