ஆருடம்:2013-ல் இந்தியா எப்படி இருக்கும்?
இந்த வருடம் முடியப்போகிறது
இந்த வருடம் இந்தியா எப்படி இருந்தது..?
எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
தொலையட்டும் தொல்லைகள்
2013-ல் இந்தியா எப்படி இருக்கும்?
யாரிடம் கேட்பது...?
ஆருடம் பார்க்கலாமென்றால்
சாதகமாய்ச் சொல்வதற்கு
ஜாதகம் வேண்டுமாம்.
இந்தியா பிறந்தது எப்போது..?
என்ன நட்சத்திரம்..? என்ன கோத்திரம்..?
எவனுக்குத் தெரியும்...இந்த உபத்திரம்.
கிளி ஜோதிடம் பார்க்கலாமா?
“இந்தியா என்ற பெயருக்கு
நல்ல அட்டை எடுத்து தா..”
என்று அழைத்தார் கிளியை
அடுக்கி வைத்த அட்டைகளை
அதுவும் அயிந்து அட்டைகளை
எடுத்து தூர வீசி விட்டு..
ஓன்று மட்டும் தந்து விட்டு..
கிலிபிடித்தது போல் கிளி
நெல் கூட வேண்டாமென்று..
கூண்டுக்குள் அடைந்து கொண்டது..
அந்தக் கிளி ஜோதிடரோ
அட்டைக்குள்ளிருந்து எடுத்தார்
அனுஷ்காவின் அரைகுறை படம்...!..?
அட..முன்பெல்லாம்
சாமி படம்தானே இருக்கும்...?
ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார்.
அனுஷ்காத்தான் அடுத்தப் பிரதமரா...?
அல்லது அடுத்த ஜனாதிபதியா...?
ஆனாலும் ஆகலாம்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?
சினிமா மாயையில்தான்
சிக்கிக்கொண்டிருக்கிறது நாடு.
அரசமரத்தடி ஜோதிடர்
தலப்பாக்கட்டி சங்கு சாமியாரிடம்
கேட்கலாமா? என்று போனால்...
அவர் திண்ணுவதற்குத்தான்
வாய் திறப்பாராம்...!
சோலி உருட்டியே
சரியாகச் சொல்வாராம்.
உருட்டி விட்டார் சோலிகளை
மனதில் அடித்தது திக்..திக்
விழுந்ததோ தாயம் ஓன்று...
அப்படியென்றால்...
உலக நாடுகளில் இந்தியா
முதலிடத்துக்கு வந்திடுமா...?
ஆமாம் என்பது போல்
புன்னகைத்தார் ஊமைச்சாமியார்..
எதில்...நம்பர்-1..? எதில் முதலிடம்...?
என்று அவரும் சொல்லவில்லை!
எதுவும் நானும் கேட்கவில்லை..!
என்றும் நல்லதே நினைப்போம்
எழுத்துதள நண்பர்களே!
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!