யார் செய்த பாவம்
வரம் ஒன்று கேட்டேன்
இது வரை கிடைக்கவில்லை
நான் செய்த பாவம் என்ன?
யாரை நான் வஞ்சித்தேன்
யாருக்கு என்ன கேடு செய்தேன்
எனக்கு மகன் வழி
வாரிசு ஒன்று தாராயோ?
செய்த பாவம் தெரியாது
வருந்துகிறாள் இப்போ
லட்சங்கள் பெறும் போதுஷ
மருமகள் வீட்டினர் பெற்ற
இன்னல்கள் அறியாது
மகளின் வாழ்வுக்கு
பலரிடம் கையேந்தி
ஒரு லட்சம் குறைந்ததுக்கு
ஊரை கூட்டி நின்று
காசு சுளையாக வந்தவுடன்
தாலி கட்ட வைத்தது
இது விட பாவம்
வேறேதும் உண்டோ
இம்மண்ணிலே
காலம் கெட்டு
சூரியநமஸ்காரம் செய்து
போக்கிட முடியுமா
நீ செய்த பாவத்தினை
மகளின் வாழ்வுக்காய் அன்று
கையேந்தினர் பலரிடம் - நீ
இன்று உன் மகனிற்காய்
கையேந்குகிறாய் இறைவனிடம்