பெண்கள் எழுத கூடாதா?

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எல்லா விடயத்திலும் உயர்ந்த நிலையிலே தான் காணப்படுகிறார்கள். ஆனாலும் சில பெண்கள் தம் திறமைகளை வெளியில் கொண்டுவர பயப்படுகிறார்கள். நாம் இப்படி செய்தால் மற்றவர்கள் எம்மை பற்றி என்ன பேசுவார்களோ என்று இந்த சமுதாயத்தை பார்த்து பயப்படுகிறார்கள். நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். உரையாடி கொண்டிருந்தேன். மேசையில் கொப்பிகள் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் என் கவிதைகள் என போட்டு ஒரு கொப்பி நிறைய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. தற்காலவிடயங்களை பிரதிபலிப்பவையாகவே இருந்தன.சீதன கொடுமை ஆடம்பர செலவுகள் புதிய பணக்காரர்கள் இப்படி தற்போதைய நடைமுறைகளை அக்கவிதைகள் காட்டி நின்றன. இவை எந்த பத்திரிகைக்க அனப்பினீர்கள் என கேட்டேன். இதுவரை எந்த பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்று பதில்கூறினா. ஏன் பத்திரிகைக்கு அனுப்பவில்லை என் நான் கேட்டேன். இதனை பார்ப்பவர்கள் னெ்ன சொல்லுவார்களோ என்ற பயம் என கூறினா. ஆம் அவா பயப்படுலதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. திருமணம் ஆகாத பெண் சீதன கொடுமை மணமகன் தகுதி இப்படி எழுதினால் இவளுக்கு இன்னம் திருமணம் ஆகவில்லை அது தான் இப்படி எழுதுகிறாள் என கூறுவார்கள். அதில் வரும் விடயங்களை உண்மையா இப்படி நடக்குது தானே என்பதற்கு முதல் எழுதியவரை பற்றி ஆராய்ச்சி நடக்கும். இது வழமை.ஒருவன் கவிதை எழுதுகிறான் என்றால் அது அவன் சுய வாழ்வினை அல்லஒவ்வொரு நிலையிலும் தம்மை வைத்து கற்பனை வடிவத்தில் வருவது தான் கவிதை நாம் அன்றாட வாழ்வில் கண்ணால் காண்பவை தினமும் நடப்பவை இவையின் அடிப்படையில் வருவது தான் கவிதை என்பதனை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சிலா நாம் எழுவதை ஏன் இப்படி எழுதுகிறா ஏன் அப்படி எழுதுகிறா என விமர்சிக்கத்தான் செய்வார்கள்.அதனை கேட்டு தம் திறமைகளை வெளிக்கொண்டுவராது இருப்பது முட்டாள்தனம்.இந்த சமூகத்தினர் ஒரு பெண் பதிதாக மணமுடித்து போனவுடன் இந்த கணவன் வீட்டில் நல்லது ஏதாவது நடந்தால் இவள் மகாலட்சுமி மாதிரி வந்த நேரம் என்பர்.அதே நேரம் வியாபாரத்தில் நட்டம் அல்லது ஏதாவத கெட்டது நடந்தால் இந்த தரித்திரம் இந்த வீடடில் கால் வைத்த நேரம் என்பர். இப்போது இந்த மகாலட்சுமி தரித்திரம் ஆனது எவ்வாறு? நாக்க என்பது நரம்பற்ற ஓர் உறுப்பு. இவர்கள் பேசுவதற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்கும். அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் அப்படி சொல்லுகிறார்கள் என இருந்தால் உங்களுக்குள் இருக்கும் திறமைகள் முடக்கப்பட்டு விடும். நீங்கள் எழுவதை பார்த்து அலட்சியம் செய்வார்கள். ஏன் தம்மால் முடியா’து அவாகள் எழுதுகிறார்கள். அவர்களுக்க ஊக்கம் கொடுப்போம் என சிந்திக்க மாட்டார்கள். நாம் எம் திறமைகளை வெளியில் கொண்டு வருவோம். உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். என்னால் எழுத முடியும். நான் எழுதுவது சரி என்ற நம்பிக்கை உங்கள் மழுது வைத்தால் போதும். பிறர் இப்படி சொல்லுகிறார்கள் அதை எப்படி நான் பத்திரிகைக்கு அனுப்புவது என யோசிக்க வேண்டாம்.உங்கள் ஆக்கங்கள் தரமானவையா என்பதனை பத்திரிகை துறையினர் முடிவு செய்வார்கள். தரமான விடயங்கள் என்றால் அவாகள் பிரசுரிப்பார்கள். அதன் பின தெரியும் உங்கள் திறமை. உன் திறமையை காட்ட நீ துணிவுடன் புறப்படு. துணிவு கொண்டு நிமிர்ந்த நில். உன்னை உயர்த்திவிடு. நீ உயர்ந்திடுவாய். பெண்ணே நீ விழத்தெழு.

எழுதியவர் : சுபா (25-Dec-12, 1:50 pm)
சேர்த்தது : Subo Saba
பார்வை : 129

மேலே