எண்ணித்துணிக கருமம்

என்னை இந்த உலகத்திற்கு காட்டியது என் எழுத்தாற்றலே என கூறி எழுத ஆரம்பித்தவர்கள் சிலரை இன்று காணவே கிடைப்பதில்லை. நான் ஆரம்பத்தில் பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதி வந்தவரை சந்தித்தேன்.என்ன முன்னர் நிறையவே எழுதுவீங்கள் தற்போது தங்கள் ஆக்கங்களை பத்திரிகையில் காணவில்லை என்று கேட்டேன். அந்த பெண் கூறிய காரணம் இது. நான் எழுதினேன். நீங்களா இதை எழுதினீங்கள். ஏன் இப்படி எழுதினீங்கள் ஆண்களை விமர்சிப்பதாக எழுதி இருக்கிறீங்கள். என்றெல்லாம் கேட்கிறார்கள் அதனால் தான் அதனால் தான் நான் எப்படி எழுத என்று சிந்தித்தேன். நான் எழுதுவதனால் தானே என்னை விமர்சிக்கிறார்கள். இவர்களின் விமர்சனங்களை கேட்டு மற்றவர்களும் என்னை கேட்கிறார்கள். அதனால் பத்திரிகைக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டேன். யார் எழுதினார்கள் என்று பார்த்து அதற்காக விமர்சனம் தெரிவிப்பவர்கள் தான் இன்று அதிகம். அதில் வரும் விடயங்கள் நடைமுறையில் இருக்கின்றனவே அதை சுட்டிக்காட்ட நல்ல விடயங்களை தானே எழுதுகிறார்கள் என பார்ப்பவர்கள் குறைவு. ஒரு கருத்தை கூற முற்படும் போது அது சரியான விடயமே அது எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். அதனை பெரியவர்கள் கூறினால் ஆம் என்று கேட்கும் இந்த சமூகம் தமக்கு தெரிந்தவர்கள் கூறினால் அதனை விமர்சிப்பர். தமக்க வேலையற்று சிலர் செய்யும் விமர்சனங்களுக்காக உங்களை நீங்கள் தாழ்த்தி விடாதீர்கள். ஆயுதம் எடுத்தவர்கள் போராடி தான் ஆக வேண்டும் என்பது கடமை. நீங்கள் பேனா என்ற ஆயுதத்தை எப்போது கையில் ஏந்தினீர்களோ அதனுடன் போராடி தான் ஆக வேண்டும். அதனால் வரும் இழப்புக்கள் இன்னல்கள் சவால்கள் ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் எதிர் கொண்டு தானே ஆக வேண்டும். ”எண்ணித்துணிக கருமம்” என்பது வள்ளுவர் வாக்கு. உங்கள் மேலே நம்பிக்கை வைத்து போராட்டமான இந்த எழுத்து துறையில் போராடுங்கள். அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எடுத்த டீபனா என்ற ஆயுதத்தை கீழே வைத்துவிட்டால் நீங்களே உங்களை தோற்கடித்த கோழைகள் ஆகிவிடுவீர்கள். உன் மேல் நம்பிக்கை வை. உன் பேனாவை கொண்டு இந்த சமூகத்துடன் போராடு நீ வெற்றியடைவாய்

எழுதியவர் : சுபா (25-Dec-12, 1:49 pm)
சேர்த்தது : Subo Saba
பார்வை : 230

மேலே