காதலை உணர்ந்த நிமிடம்

காலையும் மாலையும்

கட்டுத்தறி மாடாய் உன்னை சுற்றியே நான்



நாணம் குடிகொள்ள

நாக்கும் சேர்ந்து மடங்கி கொல்ல

வார்த்தையின்றி தவித்தேன்

நீ வந்து போன நிமிடத்தில்



சொன்னால் முறைப்பாயோ

இல்லை நீயும் சொல்லத்தான்

இவ்வழி போராயோ

அறியாத பிள்ளையாய் புரியாது நின்றேன்



வெள்ளை புறா

தபால் பெட்டி அருமை

உன்னிடம் பேச வந்து

திணறி நின்றபோது நினைவுக்கு வந்தது



காகிதம் எடுத்து கவிதை பல தீட்டி

கைகுட்டையில் மறைத்து

உன் கையில் கொடுத்து விட்டேன்



கொடுத்த பதற்றத்தில் நான்

வாங்கிய பதற்றத்தில் நீ

நிம்மதி பெறுமூச்சு விட

நான் முயன்ற நேரத்தில்



தூரத்தில் ஓர் நிழல் தெரிய

பயத்தில் நான் நெழிய



உன் துப்பட்டாவை எடுத்து

மிதி வண்டி சக்கரத்தில்

நீயே சிக்க வந்து



என்னை எடுக்க சொல்லி

ஓர்நொடி என் பயத்தை

இருநோடியில் நீ

தடுத்து நிறுத்திய போதுதான் உணர்ந்தேன்

நம் காதலின் முதல் நிமிடத்தை....

எழுதியவர் : பாலமுதன் ஆ (26-Dec-12, 6:51 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 191

சிறந்த கவிதைகள்

மேலே