கற்பழிப்புக்கு தண்டனையா..!

கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எரிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முதற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

எழுதியவர் : நிஷாந்தினி.k (27-Dec-12, 1:56 pm)
பார்வை : 282

மேலே