எப்படி மறக்க முடியும் ...?
எப்பொழுதும் உன்னுடன்
இருந்து விட்டு...
உன் நினைவுகளுடன்
இப்பொழுது இருக்க
இயலவில்லை ...
என்னை மறந்துவிடு என்று
நீ சொல்லிய பொழுதே
நீ மறந்து விட்டாய் என்னை ....
நானும் உன்னை
மறந்துவிடலாம் என்று
நினைத்தால்..
இதயம் கூட துடிக்க
மறுக்குதே ....
உன்னிடம் நான்
பேசிய வார்த்தைகளை
கூட மறக்க
இயலாது பெண்ணே...
பின்பு எங்கே
உன்னை மறப்பது...!
என் எழுத்திற்கு
உயிர் வந்ததே
உன்னை பற்றி
எழுதிய போது தான்..
இப்பொழுது உன்னை பற்றி
எழுதும் கவிதை கூட
கண்ணீர் வடிக்கின்றது
எழுது மையாய் ....
உன்னை நான்
மறக்க நினைத்தால்
என்னை நான் மறந்து போவேன்
என்னை நான் மறந்து போனால்
உன் நினைவை தான்
நினைப்பேன் ...
உன் நினைவை
நான் நினைத்தால்
பின்பு எங்கே உன்னை
நான் மறப்பேன் பெண்ணே ...
நான் இறந்தாலும்
என் இதயம் உன் பெயர்
சொல்லிச் சொல்லி
துடிக்கும் என் உயிரே ...!