வாழ்வோம் இனியாவது...
மௌனத்தை மொழியாதே,
மாற்றமொன்றைத் தந்துவிடு..
இதயத்தை உடைக்காதே,
இறுதிவரை உடன் வந்துவிடு..
என் விழியோரம் ஈரம் வழியுதடி,
வாழ்க்கையை வாழவிடு..
வேகிறேன் உன் பார்வைத் தீயில்,
எரிகிறேன், என்னை அணைத்துவிடு..
இதுவரை பேசிய வார்த்தைகளையெல்லாம்,
அடக்கம் செய்யச் சொல்கிறாய்..
இளம்பிறையாய் அரும்பிய காதலை,
அறுத்துப் போகச் சொல்கிறாய்..
உந்தன் பிரிவோடு பிடிபட்டேன்,
உறவோடு முறிவுபட்டேன்..
காலம் கடக்க, காயம் மாறுமென்றால்,
அம்மாற்றம் தரும் காலத்தை வெறுத்து நிற்பேன்..
என் தேடல் உனக்குப் புரியும் நேரம்,
இரு துருவம் சேரும் நேரமதுவோ..
என்னைச் சாடல் செய்யும் கனத்திலாவது,
என் பெயரை ஒருமுறை உச்சரித்தாலென்ன..
தூறல் போடும் உந்தன் மேகமது,
என்னில் தூவிப் போன சோகமது..
சாரல் தந்து போக வேண்டாம்,
எனினும்,
இதயக் கீறல் தந்து போவதேனோ..
தோழி உன்னைக் கண்டவுடன்,
காதல் எண்ணம் பிறக்கவில்லை..
நீ காதலியான அந்த தருணம்,
தோல்வி நிலையெனப் புரிந்துவிட்டேன்..
இனி வரும் காலமாவது,
மகிழ்வோடு வாழ்திருப்போம்..
நீ, உன் துணையோடு,
நான், என் துணையான உன் நினைவோடு..!!
-பிரதீப்-