வருடம் 2013

வருடமொரு நாள் குறித்தோம்
புது வருடம் காட்ட
வந்தவுடன் வாழ்த்துகிறோம்
புது சுரங்கள் மீட்ட

புதிதாக வருவதென்ன
புரியலையே காட்ட
பதிப்புகள் தான் வரும் புதுசா
சுவர்களிலே மாட்ட

நாள் குறித்து மாறுமுன்னா
நவ உலகம் பிறக்கும்
நம்பிக்கை நலங்களெல்லாம்
நிலையாக பெருக்கும்

சூரியனும் முதல் நாளில்
கிழக்கில தான் உதிக்கும்
சந்திரனும் பூமி சுத்தி
கட்டு படும் விதிக்கும்

கொண்டாட இன்னொரு நாள்
புது வருட பழக்கம்
கொடுப்பதற்கும் குடிப்பதற்கும்
பொலிவு தரும் வழக்கம்

வாழ்க்கையை கணக்கெடுக்க
இந்நாளை குறிக்கும்
மானுடர்க்கு வளம் பெருகி
வாழ்வென்றும் செழிக்கும்

வாழ்த்து சொல்ல நாளென்ன
எந்நாளும் பிடிக்கும்
வாழ்வுயர வழி பிறக்க
இக்கவிதை படிக்கும்

எழுதியவர் : நா,குமார் (31-Dec-12, 4:30 pm)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 183

மேலே