மழையோடு காதல்...
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு மழையே ....
உன் துளி பட்டு நான் கரைந்து போனேனே..!
உன் சாரல் பட்டு நான் சிலிர்த்து போனேனே..!
தொட்டவுடன் உடையும் வைரக்கல்லே.,
உன் மேல் நானும் காதல் கொண்டேனே..!
மொழியற்ற உன்னோடு நான் மட்டும் பேசுகிறேன்.!
வான்மகளே.,
நீ கொண்ட பிரசவம் இன்னும் முடியவில்லையா?,
மழை குழந்தை வெளிவர மாதங்கள் போதவில்லையா .???
என் பாலைவன மனதில்,
உன் ஈரம் பட்டு உயிர் பெற்றேன் !
இயற்கைக்கு உயிர் தந்து,
தாயானாய்..!
தரையோடு குதித்து விளையாடுகையில்,
குழந்தையானாய் ..!
என் சோகம் தீர்த்து,
என் தோழியானாய்..!
பலமுகம் கொண்டாலும் உன் சாரல் மொழி ஒன்றே..!
என் மனம் மகிழ வா என் மழையே..
உன் வரவு காண விழியோரம் வினாவோடு,
காத்திருக்கிறேன்...!
என் தேகம் சிலிர்க்கும் பதிலோடு ஓடி வா .!
என்றென்றும் காத்திருப்பேன்,
உனக்காக நான்....!