இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தாழ்வு எல்லாம் போக்கிடவும்
வாழ்வு எல்லாம் வழங்கிடவும்
செய்திடவே நல்லுதவி
நண்பர்குழாம் பெருகிடவும்
பெருகிவிட்ட நண்பர்களும்
அன்பதனில் உருகிடவும்
எங்கு இருந்தாலும் நம்மை
மங்காத காதலினால்
கட்டிடும் புனிதம் அது
மொந்தை மொந்தையாய்
குடித்தாலும் வழுக்கிடா
சொந்தமான புனித மது
கட்டற்று வழிந்திடவும்
மங்குதலே இல்லாத
மந்திர வாழ்வாக
பொங்கட்டும் மங்கலம்
புத்தாண்டு முழுவதுமே.
இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.