வருக ஜனவரி 2013

கடந்த வருடத்தின் சாதனையை
நினைத்து பெருமிதம் அடைவோம் !!!

கடந்த வருடத்தின் கசப்பை
மறப்போம் மன்னிப்போம்!

புது வருடத்தை
புது எண்ணங்களோடு வரவேற்போம் !

எதிர்பார்ப்புகளை குறைத்து
அன்போடு நம் சொந்தங்களை ஏற்றுகொள்வோம்!!

கடவுள் தந்த அழகான புது 365 நாட்களையும்
தினமும் புது புது அர்த்தங்களுடன் துவங்குவோம்!!

பெண்களை வதம் செய்வதை தவிர்த்து
பெண்களுக்கு பாதுகாப்பான பூங்காவனத்தை உருவாக்குவோம்!!

ஆண்மகனே, இதுவே புது ஆண்டின் உறுதி மொழியாக எடுத்து கொண்டு
அனைவருக்கும் நிம்மதி பெருக்கெடுத்து ஓட !
பல வண்ணங்கள் நிறைந்த சிறுபிள்ளையின் அழகு ஓவியம் போல !
பூக்களின் அழகில் அழகான பூந்தோட்டம் போல !
பிரமாண்டமான ஆண்டாய் அமைக்க துணை புரியுங்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

எழுதியவர் : கவிதாயினி (31-Dec-12, 8:24 pm)
பார்வை : 265

மேலே