புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2013
புதிதாய் பிறப்போம் புத்தாண்டில் - பல
புதுமைகள் படைப்போம் இவ்வாண்டில்
திட்டங்கள் வகுப்போம் உயர்ந்திடவே
செயல்களை செவ்வென முடிப்போம்
மன நிறைவுடனே...
சாதி மத இன பேதமெல்லாம்
அகற்றியே வாழ்தலில் அழகுண்டாம்
நீதி நெறிமுறை தவறாமல்
நடத்தலில் என்றும் புகழுண்டாம்
புத்தாண்டினில் இதனை உறுதி செய்வோம்
புதுப் பொலிவுடன் பாதையை வகுத்திடுவோம்..
இறந்த காலங்களை இனி மறப்போம்
இருக்கும் காலங்களை வரையறுப்போம்
வரையறை வாழ்வினில் ந(ம்)மை புகுத்தி
குறைவின்றி நிறைவாய் வாழ்ந்திடுவோம்
நாட்டிலுள்ளோர் நலம் பெறவே
புத்தாண்டும் வாழ்த்தொலி இசைக்கிறது
சுடர்மிகு பாதை தெரிகிறது - இனி
மகிழ்ச்சிப் பயணங்களைத் தொடர்ந்திடுவோம்...
எழுத்துலகில் வசிப்பவர்க்கும்
எழுத்தினில் வந்து வாசிப்பவர்க்கும்
அத்தனை அத்தனை பேர்களுக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
சொ. சாந்தி