குழந்தை வரம்

"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (1-Jan-13, 12:58 pm)
Tanglish : kuzhanthai varam
பார்வை : 120

மேலே