என்னை வருட உன் விரல்கள் வேண்டும்....

உன் மென்மை விரல்கள் வேண்டும்
பசித்த என் வயிற்றிற்கு
உணவை ஊட்டி விட....

உன் பவள விரல்கள் வேண்டும்
என் சின்ன கன்னம் பிடித்து
செல்லமாய் கிள்ளிவிட...

உன் மருதாணி விரல்கள் வேண்டும்
கடற்கரையில் விழாமல் பிடித்து
நடக்க....

உன் பாச விரல்கள் வேண்டும்
ஆசையாய் தலை கோதிவிட
தொட்டு வருட...
துயர் துயர்த்திட....


அன்பான
அன்னையே
ஆசையாய் ஓர் முத்தம்
இதோ உன் விரல்களுக்கு
என்னை சுமந்து தாலாட்டும்
உன் விரல்களுக்கு...

-PRIYA

(ஹஜ்ஜா அக்காவின் கவிதையை படித்து அதன் தாக்கத்தால் எழுதியதால் இக்கவிதையை அவர்களுக்கே சமர்பிக்கிறேன் )

எழுதியவர் : PRIYA (1-Jan-13, 12:57 pm)
பார்வை : 170

மேலே