புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனியவர்களே ,
ஈன்றவென் தாய்க்கும் உயிர்
போன்றவென் தமிழுக்கும்
வணக்கமிட்டு பயணிக்கிறேன் என் வரிகளோடு !
என்னோடு பிரவேசிக்கும்
என்னிந்த உலகமெங்கும்
அன்பு
ஆற்றல்
இன்பம்
ஈகை
உழைப்பு
ஊக்கம்
எண்ணல்
ஏறி
ஐசுவரியம்
ஒட்டி
ஒம்பல்
படரட்டும்!
மனிதம் மலர்ந்து
மானுடம் வளரட்டும்.
இல்லாமல் போகட்டும்
இல்லாமை.
காற்றழுத்த கரையேறி
அஸ்தமிக்கட்டும்-பொல்லாத
கல்லாமை
நல்லெண்ண நாற்று உலக
நாடெங்கும் நடவுபடட்டும் !
பச்சிளம் கடவுள் தொட்டு -நம்
பாட்டிகள் வரை
காட்டுத் தீயென
சாலப் பரவட்டும்
சகோதரித்துவம் !!
ஆண்டாள்
ஔவை
வள்ளுவன்
வால்மீகி
கம்பன்
கபிலன்
நக்கீரன்
நாதகுத்தன்
முரசுகவி
கவியரசு
உலகநாதன்
ரங்கநாதன்
எண்ணக் கிணற்றில்
இறைத்தனவெல்லாம்
ஊட்டப்பெறட்டும் !!
என் உள்ளமதில்
அன்பானவர்களே -உமக்கென்
புத்தாண்டு வாழ்த்துக்களை கூவி
மகிழ்கிறேன் !
த . ரங்கநாதன்