மாயாது என் தூய தமிழ் மொழி தானடியோ!
தூவல்(பேனா) இலா காலத்திலிருந்து தூவும் - செயற்கை
அறநெறி இலா அறிவியல் இப்பூமியில்
புகுந்தழித்து கொண்டிருக்கும் சாத்திரம் பாரடியோ!
இப்புதுமை சாத்திரம் பாய்ந்தலழித்தாலும்
புதரிடை பதுங்காது புதுமை சரித்திரம் படைத்திடும்
தமிழ் மொழி தானடியோ !
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் இப்புவி சீற்றம்
பெற்றாலும் சிந்தையில் அமிர்தாய்
சுவை ஊறும்- தேனாய் தமிழ் ஊறும்
சாத்திரம் பாரடியோ !
விந்தைகள் ஆயிரம் விரித்து காட்டி மாய
அறிவியல் மறைத்து காட்டிலும்
மாயாது என் தமிழ் மொழி தானடியோ !!!!!!!!!