உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

தை பிறந்தும் வழி பிறக்கவில்லை
உழவர் வாழ்விலே
பயிரிட்ட பூமியெல்லாம்
நீரின்றி பிளவிலே...

பொய்த்த மழை காரணத்தால்
பயிர் தழைக்கவில்லை
போட்ட பணம் கருகியதால்
உழவர்க்கு தைப் பொங்கலுமில்லை...

மூன்று போக விளைச்சல் கண்ட
கால நிலை மாறி - இன்று
ஒரு போக விளைச்சலுக்கே
பொழியவில்லை மாரி...

சாகுபடி செய்த நிலத்தில்
விளைச்சலே இல்லை - உழவன்
சாகும்படி ஆன நிலை
தரித்திரத்தின் எல்லை...

வருணனுமே மனங்குளிர
மரங்கள் பல வளர்ப்போம்
அவன் பூமி குளிர பொழிந்திடுவான்
உழவர் குலம் தழைக்கும்

உழவுத் தொழிலும் உழவருமே
மரணத்தின் விளிம்பில் - அரசு
உதவிக் கரம் நீட்டி விட்டால்
இரண்டு உயிரும் துளிர்ப்பில்...


குறிப்பு: மாற்றம் செய்யப்பட்டு மீள்பதிவு செய்திருக்கிறேன்

எழுதியவர் : சொ. சாந்தி (1-Jan-13, 4:42 pm)
பார்வை : 290

மேலே