உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே(பொங்கல் கவிதைப் போட்டி)

மாளிகை சுக போதையிலே
வாகன வசதி மயக்கத்திலே
பாட்டன் அரும் பாடு பட்டு
சேர்த்த விளை நிலம் விற்றாயே!

தாத்தன் சொத்தை பாங்காய்
நினையா கல் மனமே
வாரிசுகளின் நலம் கொள்ளா
அசுர இரும்பு நெஞ்சமே!

வெளிப் பகட்டுக்குக் கல் மாளிகையா?
வெளி வேஷத்திற்கு வெள்ளை வாகனமா?
கொண்டைக்கு பூ முக்கியமா?
உண்டிக்கு சோறு முக்கியமா?

கல்வியில் தேர்ந்தனை விவசாயம்
கற்றதை விற்றதோ வெளிதேசம்
தாய் மண்ணை மறந்தது நியாயமா?
நன்செய் புன்செய்யானதும் நியாயமா?

படித்தவனுக்கோ பணிகள் ஆயிரம்
பாமரன் நம்புவதோ விவசாயம்
விவசாயியை நம்புவது விளை நிலம்
விளை நிலத்தால் உய்வதுவே நானிலம்.

திக்கென்று அஞ்சுது உள் மனம்
திக்கெல்லாம் பாயுது வன்மனம்
உழவனும் உழவும் மரணத்தின் விளிம்பிலே
ஊனந்தரும் உந்துதல் மனிதனின் அழிவிலே.

எழுதியவர் : மேரி ஜெசிந்தா (2-Jan-13, 3:00 pm)
பார்வை : 110

மேலே