உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே ....(பொங்கல் கவிதைப் போட்டி)

கழனிகள் இங்கு காங்க்ரீட் காடாச்சு..
காணும் இடமெல்லாம் இருந்த
ஆலமரமும் ..அரசமரமும்.. காணாமல் போயாச்சு..
'ஆன்டனாக்' கம்பிகளின் ஆட்சி வந்தாச்சு...
பறவைகளின் சத்தம் போயாச்சு..
பரந்துவிரிந்த ஆறும் பாழாச்சு...
உழவும் ..நடவும்..அழிந்தாச்சு...
உழவன்..,. மனமும் தளர்ந்தாச்சு ...
முல்லை பெரியார்..ஏக்க மூச்சில்..
காவேரி தண்ணியோ கண்நீராச்சு...
அரசியல் இங்கே வேடிக்கைக் காட்டும்...
ஆட்சியாளருக்கும் மூச்சு முட்டும்...
உரசிடும் பொறியைத் தூண்டி...
உள்ளூர் அரசியல் ஆட்டம் போடும்...
விளைந்த பயிர்கள் கருகக் கண்டு..
உடைந்து போனது.. உழவன்.. மனமே..-இதில்..
எதுவும் எனக்கில்லை என்று இருக்கும் மனிதா..
நீ..மௌனத்தின் வாசலில்..படுக்கைப் போட்டால்...
உழவன் ஒருவன் தேடும் மரணம்..
ஒரு மனிதனின் மரணமாய் இருக்காது...
அது...நீ உண்ணும் உணவின் மரணம்,,,
உன் சமூகத்தின் மரணம்...மறந்து இங்கு வாழாதே ..
மறு மார்க்கம் தேட மறவாதே...!

எழுதியவர் : ந. ஜெயபாலன்,நெல்லைநகர் (3-Jan-13, 10:10 am)
பார்வை : 109

புதிய படைப்புகள்

மேலே