மரித்துப்போன ஏக்கங்கள்....
பகிரப்படாத வாழ்வின் பக்கங்கள்
ஏக்கங்களே ஆசையாய்...
பட்டாம்பூச்சியாய் பறந்த ஆசைகள்
பட்டுப்பூச்சியாய் மரித்துப்போயின
பட்டுப்புடவையை ரசிப்போருக்கு
பட்டுப்பூச்சியின் பரிணாமம்
இழைபிரிந்து வெந்நீரில்வெந்தவலி
ரசிப்போர் அறிவதில்லை...
கூட்டுப்புழுவின் கதறல் சத்தம்
கல்லறையோடு முடிந்ததுபோல் - என்
ஆசைகளும் எனக்குள்ளேயே முடங்கின...
என்னிலிருந்து விழுந்த இறகுகள்
கண் முன்னே சிதறிக்கிடக்கிறது...
எடுத்துத் தொடுத்து பறக்கவே
மீண்டும் முயற்சிக்கின்றேன்...
இறகுகளோ சிறகுகளாய் பறந்திட
முயற்சிகள் மூர்ச்சையாகின்றன...
இயன்றவர்கள் முயற்சி செய்து - என்
இறகுகளை மீட்டுத் தாருங்களேன்
மீண்டுமொரு முறை பறக்கின்றேன்...