சத்தியம் புதுமைகளுக்காக

மாண்டவைக்காக ஏங்குகிறாய் நீ
நான் செத்தவற்றிற்கு எதிரானவன்
புதுமைக்காக காத்துகொண்டிரு
ஏனெனில் காத்திருபில்தான்
புதுமை நிகழ்கிறது

செத்துப்போன மதங்களோடு
உனக்கென்ன பந்தம்
பந்தத்தை முறித்துவிடு

தனிமையாய் காத்திரு வாழ்வின்
சுகந்ததிற்காக !
மதங்கள் செத்துபோனவை!
சடங்குகள் செத்துபோனவை !
விழிப்போடு இவைகளை
எறித்துவிடு உன்னையும்தான்
புதுமை பிறக்கும் வரை
எறித்து கொண்டே இரு
விழிப்போடு !

ஏனேனில் சத்தியம்
புதுமைகளுக்கு மட்டுமே
கட்டுப்பட்டது
புதைந்தவைகளுக்கு
அல்ல !

எழுதியவர் : கார்த்திக் -திருநெல்வேலி (3-Jan-13, 10:04 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 106

மேலே