வயது

தேய்பிறை இல்லா
வளரும் வயதே
உடல் தேயத் தேய
நகரும் வயதே
ஆதியில் அனைவராலும்
அள்ளி அணைக்கப்பட்டாய்;
நாட்கள் ஓடஓட
சிறுவன் வேடமிட்டாய்;
கொஞ்சம் உருமாறி
மாணவன் வடிவம்பெற்றாய்;
உடல் முறுக்கேறி
இளைஞனாக வீரியமானாய்;
துணை வேண்டி
இல்லறம் புகுந்தாய்;
பொறுப்பு சுமந்து
பெற்றோர் ஸ்தானமடைந்தாய்;
உழைப்பால் உயர்ந்து
செல்வம் சிரித்தாய்;
நரைகள் முளைய
தோள் சுருங்கினாய்;
நோய்யில்லா ஒய்வுக்காக
நிம்மதி நாடினாய்;
அந்தம் அருகில்வர
அரவணைப்பு தேடினாய்;
தனிமை படுக்கையில்
தளர்ந்து படுக்கயில்
வாழ்ந்த வாழ்வின்
அர்த்தம் தேடினாய்;
அனுபவம் அறிந்தாய்
பாசம் பகிர்ந்தாய்
மற்றவர் சிரிப்பில்
மகிழ்ச்சி மலர்ந்தாய்
தனிமை படுக்கையில்
தளர்ந்து படுக்கயில்
கடைசி நாட்களில்
காரணம் உணர்ந்தாய்!!!

எழுதியவர் : Baveethra (3-Jan-13, 7:55 pm)
சேர்த்தது : Baveethra
பார்வை : 138

மேலே