நெஞ்சத்தின் ஓரம் நெருஞ்சி முள் உறுத்தல்......
நான் நடை பாதை இல்லாமல் இருந்த போது.....
நம்பிக்கைக்கான பாலத்தை அமைத்தவன் நீ....
நான் நம்பிக்கையும் இழந்த போது...
தன்னம்பிக்கையாய் வந்தவன் நீ...
தோழனே உன் தோள் சாயும் நேரத்தில்
என் தோல்விகளை கூட நான் எட்டி உதைத்திருக்கிறேன்.....
நண்பனே உன் உறவிற்கு பெயர் வைக்க தெரியவில்லை....
உறவுகளின் மொத்த உருவமாய் நீ இருந்ததால்,
உனக்கு "உணர்வுகள்" என்று பெயரிட்டேன்....
உன்னோடு விரல் பிடித்து விளையாடிய நிமிடங்கள் எல்லாம்....
என் விழி நீர் பட்டு கரைந்து போகிறது....
நீ விழி நீரை துடைக்க வேண்டாம்,
பிரிந்து போன நம் நட்பின் வீணையை உன் விரல் கொண்டு மீட்டிடு அது போதும்...
தோழனே ! காத்திருக்கிறேன் !
உனை பிரிந்து நான் வடிக்கும் கண்ணீர் துளியின்
கடைசி துளி..
இந்த மண்ணை முத்தமிடுவதற்குள் உன் விரல்கள் தாங்கி பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு.........